Header Shelvazug

http://shelvazug.com/

கரடியே காறித்துப்பிய கதையிது?


இலங்கை அரசியலில் மாறி மாறி பதவியிலிருந்து விட்டு தற்போது சாத்தான்கள் பாணியில் வேதம் ஓதுவதில் முதன்மையானவராக உள்ளவர் சி.தவராசா.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு சில்லறை சேகரித்த அவர் மறுபுறம் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் பினாமியாகவும் செயற்பட்டே வருகின்றார்.
எனினும் தற்போது முன்னைய தாய்க்கட்சியான ஈபிடிபியுடன் இணைந்துள்ள அவர் மஹிந்த ரணில் என தொடரும் நில ஆக்கிரமிப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். 
அதிலும் கூட்டமைப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற ஆளாக அவர் மாறியுமுள்ளார்.
சிங்கள மயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள், அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பது ஏன் என,  வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா வினவியுள்ளார்..
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வவுனியா வடக்கு பிரதேசத்துக்குட்பட்ட கற்சல்சமணங் குளத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சப்புமல்கஸ்கந்த என பெயர் மாற்றி சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒருபுறத்திலும் நெடுங்கேணி பிரதேசத்துக்குட்பட்ட ஊற்றுக் குளம் என்ற தமிழ்க் கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மறுபுறத்திலும் அண்மைக்காலமாக தீவிரமாக நடைபெறுவதாக செய்திகள் வெளியாகுகியுள்ளனவெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்..
அத்துடன் ஊற்றுக்குளத்தில் ஒரு பௌத்த துறவி இரு காவலாளிகளுடன் தங்கியுள்ளதாகவும் அறியவருவதாகத் தெரிவித்த அவர், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல தொல்பொருள் திணைக்களம் சமணங்குளம் விநாயகர் கோவிலை வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தொல்பொருள் பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியக்கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வனங்களை பாதுகாப்பதாக பல தமிழ் பேசும் மக்களை அவர்களது பூர்வீக இடங்களில் குடியேறவிடாது தடுத்துவரும் வனவிலங்கு இலாகா பிக்குமார் காடழிப்பில் ஈடுபடும்போது மட்டும் மௌனமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான அநீதிச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அரசியல் அமைப்பு மாற்றம் தேவையில்லையெனவும் சாதாரண ஓர் அமைச்சர் நினைத்தால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதைக்கூட செய்விக்கமுடியாமல் நாம் இந்நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாத்து இந்த அரசையும் தெரடர்ந்து  பாதுகாப்பதில் என்ன பயன் என, அவர் மேலும் கூறினார்.

No comments