வடக்கிற்கு தெற்கிலிருந்து நியமனம்?


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் புதிய பிரிவான அவசர நோயாளர் பிரிவுக்கு 60 சிங்கள சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரச நிறுவனங்கள் , மாவட்ட செயலகங்கள், பலகலைக்கழகங்கள் என சகல இடங்களிலும் தென்பகுதியை சேர்ந்த சிங்களவர்கள் நியமிக்கபடுவது தொடர்கின்றது. குறிப்பாக தென்பகுதி அமைச்சர்களின் எடுபிடிகள் சிற்றுழியர்கள்; பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வந்தனர்.

தெற்கில் ஏற்கனவே உள்ள ஆளணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் வடக்கில் மட்டும் வெற்றிடமாக ஆளணி வெற்றிடங்கள் உள்ளன.அரச நடைமுறைகள எதுவும் இந்த நியமனங்களில் பின்பற்ற படாது இந்நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதே போல கடந்த ஆண்டு வடமாகாணத்தில் புதிதாக 46 சிங்களவர்கள் மின்சார சபை ஊழியர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இப்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் புதிய பிரிவான அவசர நோயாளர் பிரிவுக்கு 60 சிங்கள சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மத்திய அரசாங்கம் சட்டத்திற்கு புறம்பாக எவ்வாறு இந்த நியமங்களை செய்ய முடிகிறது ? .பிணை முறி மோசடி விவாதம் தொடக்கம் ரணில் அரசுக்கு கூட்டமைப்பு வக்காலத்து வாங்கிவருகின்றது.

உண்மையில் பல ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வில்லை . இலங்கை கணக்காளர் பரீட்சையில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் . கிழக்கில் முகாமமைத்துவ உதவியாளர் நியமனத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் . எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் இருந்த பொது வேலைவாய்ப்பு கேட்ட பட்டதாரிகளிடம் சம்பந்தன் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்தால் தீர்வு பாதிக்கும் என சொன்னார் .சில மாதங்களுக்கு பின்னர் அதே சம்பந்தன் சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய அல்லக்கைகள் சிலரை அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் சிபாரிசு செய்து யாழ்ப்பாண வைத்தியசாலையில் நியமனம் பெற்று கொடுத்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயகம் வேண்டி குரல் கொடுத்த கொழும்பு வாழ் புத்தியீவிகள் தொடக்கம் பதவிகளுக்கு தமிழ் அரசியல் வாதிகள் பின் அலையும் எங்கள் ஊர் அல்லக்கைகள் வரை யாருமே நாள் தோறும் பாதிக்கப்படுகிற அப்பாவி மக்களுக்காக பேச தயாரில்லையென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

No comments