அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து! 81 பேர் பலி! மேலும் பலர் காயம்!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற தீவிபத்தில் 81 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ளனர்.

நேற்றிரவு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒருபகுதியில் இருந்து இருந்து இராசாயண களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீயினால் அடுக்குமாடியே தீப்பிடித்து எரிந்துள்ளது.

இத்தீவிபத்தில் முதலில் 69 உயிரிழந்ததாக அறிவிக்கபட்டபோதும், தற்போது அதன் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் தீக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வருகின்றார்கள்.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். சுமார் 200 வரையான தீயைணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

# Bangaladesh fire #Bangaladesh 

No comments