வவுனியாவில் மரக்கறி வணிக நிலையங்களில் கூரை உடைத்து திருட்டு!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டுப் போன பகுதியில் 35 வணிக நிலையங்கள் அமைந்துள்ளன. அதில் 6 வணிக நிலையங்களுக்குள் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர் கூட்டம் அங்கு வியாபாரத்தேவைகளுக்காக வைத்திருந்த பணங்களைக் திருடிச் சென்றுள்ளனர்.
திருடுவதற்கு முன்பாக அப்பகுதியில் அமைந்திருந்த சி.சி.டிவி கமராக்களைச் செயலிழக்கச் செய்துவிட்டு வணிக நிலையங்களின் கூரைவழியாக உள்நுழைந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினரின் விசாரணைகளில் தொிய வந்துள்ளனர்.

வணிக நிலையங்கள் இரவு 7 மணியளவில் பூட்டப்பட்ட பின்னர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற நேரம் சில வணிக நிலைய நிலையங்கள் திறந்திருந்த நிலையில் கடைகளுக்குள் சத்தம் கேட்டதை அடுத்து அவர்கள் கடை உரியாளர்களுக்கு தகவல் வழங்கியிருந்ததாகவும் அதைத் தொடர்ந்தே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க்பபட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Vavuniya
Post a Comment