லஞ்சம் பெற்ற உத்தியோகத்தர் வீட்டிற்கு?

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா நிதிக்கு, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் உத்தியோகத்தர் ஒருவர், பயனாளிகளிடம் ஒரு லட்சம் ரூபாவுக்கான காசோலையை வழங்கும் போது 15 ஆயிரம் ரொக்கப் பணம் லஞ்சமாக கோரப்படுவதாக பனாளி ஒருவரினால் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவ்வாறு இலஞ்சப் பணத்தினை பி்தேச செயலகம் முன்பாக உள்ள ஓர் தேநீர் கடையில் வைத்தே வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் கொழும்பில் இருந்து பொலிஸார் சகிதம் மறைந்திருந்துள்ளனர்.

இதேநேரம் குறித்த தேநீர்ச் சாலையிலும் இரு உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வழிப்போக்கர்கள் போன்று தேநீர் அருந்தியுள்ளனர்.

ஓர் பயனாளி காசோலைக்குரிய லஞ்சப்பணத்தினை தேநீர்ச் சாலையில் வைத்து உத்தியோகத்தரிடம் வழங்கும் போது, ஆணைக்குழு அதிகாரிகள் புகைப்பட ஆதாரங்கள் சகிதம் கடந்த 15 ஆம் திகதி கையும் மெஞ்யுமாக அவரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தினர்.

குறித்த வழக்கினை ஆராய்ந்த கிளிநொச்சி நீதவான் உத்தியோகத்தர் 14 நாள்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார் . அதேநேரம் உத்தியோகத்தர் தொடர்பில் திணைக்களம் சார் நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

No comments