மஹிந்த வீட்டு திருமணத்தில் ரணில் மற்றும் மைத்திரி?


வீரகெட்டிய- கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹிதவின் திருமண வைபவத்தில் இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துக்கொண்டார்.

குறித்த திருமண வைபத்துக்கு பிரதமர், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,உறுப்பினர்கள்  மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக சிங்கப்பூர் புறப்பட்டு செல்லமுன்னர் நாட்டின் ஜனாதிபதி மைத்திரியும் மணமக்களை சந்தித்து வாழ்த்தியதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் ரணிலும் சிரித்து பேசியவாறு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

No comments