நினைவேந்தப்பட்டது கொக்கட்டிச்சோலைப் படுகொலை!

இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ,மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளர் ரகுநாத் தலைமையில்  நடைபெற்றது.

இன்நிகழ்வு முன்னதாக இப்படுகொலைச்சம்பவத்தில் நான்கு உறவுகளை இழந்த தாயார் ஒருவரான அமரசிங்கம் சீதேவிீப்பிள்ளை அம்மாவின் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்மாகியது.  அதனைத்தொடர்ந்து நாராயணபிள்ளை சிவகரன் அவர்களின்  மாலை அணிவித்தல் நிகழ்வுடன் பொதுமக்கள் சுடரேற்றல் நிகழ்வும் இடம்பெற்றது.    அதனைத்தொடர்ந்து கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்  மற்றும் செயலாளர் குழந்தைவேல் ஜெகநீதன் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளரான சிவகுமார் (மோகன்) ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். மற்றும் தலைமயுரையினை ரகுநாத் அவர்களும்  நன்றியுரையினை பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளரான பாக்கியராசா ஆகியோரும் ஆற்றியிருந்தனர்.

இன்நிகழ்வில் கட்சியின் மட்டுமாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments