கிளிநொச்சி நடந்த கவனயீர்ப்புப் போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்திய போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை முற்பகல் ஒன்றுகூடிய மக்கள் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்கக் கோரி, தொடர்ச்சியாக போராட்டத்தினை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மக்களால் குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments