கனடா மொன்றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு

05/01/2019 அன்று கனடா  மொன்றியல் மாநகரில் கியுபெக் தமிழர் அபிவிருத்தி சங்கத்தினால் முதன் முறையாக எமது பாரம்பரைய காலாச்சாராத்துடன் 40 இற்க்கு  மேற்ப்பட்ட அமைப்புகள் 9 சமூக வலைத்தலங்கள் 400 இற்க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் ஆதரவுடனும் மற்றும் பிறமொழி பேசும் அமைப்புகளின் பிரதிநிதிகளோடும் இந்த மரபு திங்கள் நிகழ்வு மிகவும் கோலகலமாக நடாத்தப்பட்டது.

இது கனடா ( கியுபெக்)புலம்பெயர் தமிழர்களின் வரலாறு கானாத ஒரு வெற்றியாகும். இந்த நிகழ்ச்சியானது எங்களது மதகுருமார்கள் ஆசிர்வாதத்துடனும்,மத்திய மாநில பாராளுமன்ற உருப்பினர்கள் முன்னிலையிலும்,மற்றும் மாநகர ஆட்சியாளர் முன்னிலையிலும் வெற்றிகராமாக நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியானது எங்களது கலைகலாச்சாரத்தை பிரதிபளிக்கும் சிறப்பு  நிகழ்வாக அனைவராலும் கருதப்பட்டது.  மேலும் சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றிய அருட்தந்தை றோகான் (U.N), மற்றும் ஒன்றாரியோ முன்னால் மாநகர உறுப்பினரும், இந்த தமிழ் மரபு திங்கள் உருவாக்கத்திற்கு காரனகர்த்தாவாக விளங்கியவருமான நீதன்ஷான் ஆகியோரின் சிறப்பு பேச்சும் இந் நிகழ்விற்கு வலுசேர்த்தது எனலாம்.

No comments