கூரேக்கு கிட்டியது இரத்தினக்கல், தங்கம்?

மைத்திரியால் பதவி பறிக்கப்பட்ட வடக்கு மாகாண முன்னால் ஆளுநரிற்கு புதிய பதவி கிட்டியுள்ளது. அவருக்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவராக மைத்திரி நியமனம் வழங்கியுள்ளார்.

சுதந்திரக்கட்சியில் தனக்கெதிராக சதி செய்ததாக குற்றஞ்சுமத்தி ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயினை மைத்திரி பதவி துறக்க வைத்திருந்தார். எனினும் தான் சுதந்திரக்கட்சிக்கு ஆதரவானவனாகவே செயற்படுவேனென கூரே உறுதி மொழி வழங்கியிருந்தார்.

இதனையடுத்தே தற்போது அவருக்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவராக மைத்திரி நியமனம் வழங்கியுள்ளார்.

No comments