மைத்திரியின் நிவாரணம் கிளிநொச்சியில்?


வெள்ளம் பாதித்த வன்னி மக்களிற்கு 2019 புத்தாண்டுப் பரிசாக கிளிநொச்சிக்கு வெள்ள நிவாரணத்தை மைத்திரி அனுப்பி வைத்துள்ளார்.இலங்கை ஐனாதிபதி செயலகமும், புகையிரத திணைக்களமும் இணைந்து சிறப்புப் புகையிரதம் மூலம் இன்று முதலாம் திகதி கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு; உலருணவை அனுப்பி வைத்துள்ளனர்.

ஏற்கனவே தன்னார்வ தமிழ் மக்களது பங்களிப்பினால் வன்னி மக்கள் மீட்கப்பட்டுவிட்ட போதும் இலங்கை அரசு ரணில் -கூட்டமைப்பு தரப்பு ஒரு பகுதியாகவும் இன்னொரு புறம் மைத்திரி தரப்பு இன்னொரு புறமுமாக நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே ரணில் அவரது அமைச்சர்கள் நாள் தோறும் கிளிநொச்சிக்கு படையெடுத்து வருகின்றநிலையில் தற்போது மைத்திரி தரப்பு புகையிரத நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்பு,நில ஆக்கிரமிப்பு,காணாமல் போனோர் விவகாரம் ,பௌத்த மயமாக்கல் ,அரசியல் தீர்வென பல பிரச்சினைகள் உள்ளபோதும் அது பற்றி கண்டுகொள்ளாத தெற்கு ஆட்சியாளர்கள் சலுகை அரசியல் மூலம் தமது நாடகங்களை அரங்கேற்ற தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments