இலங்கை மதுபானச்சாலைகளில் 90 விழுக்காடு அரசியல்வாதிகளதே?


இலங்கை மதுக்கடைகளில் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளவற்றில், தொண்ணூறு சதவீதம் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசு மதுபான பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வந்தபோதும் மதுபான உரிமங்களைத் தொடர்ந்து வினியோகிப்பதற்கும், மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அதே அரசே முன்னின்று செயற்பட்டுவருகின்றது.

அரசு மதுபானை விற்பனையினை நிறுத்தினால்  மூடப்படும் மதுபானச்சாலைகள் அரசியல்வாதிகளினதேயென தெரியவந்துள்ளது. 

மது விற்பனை வர்த்தகத்தில் அரசியல் அதிகாரிகளின் நேரடி மற்றும் மறைமுக குறுக்கீடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதனிடையே கிளிநொச்சியின் முனனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் இவ்வாறு பல மதுபான சாலைகளது உரிமையாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments