இலங்கை முன்னணி வங்கியில் நிதி மோசடி?


இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சம்பத வங்கி அரங்கேற்றிய மோசடிகள் அம்பலத்திற்கு வந்துள்ளது.குறித்தமோசடி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக தெரியவந்துள்ளது.

மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது காசோலைகள் மற்றும் சீட்டுகள் தொகை கையாளுதல்கள் மற்றும் மேலதிக கடன் தொகைகள் சேர்க்கப்பட்டன என்று கூறுகின்றன. அவர்களின் கணக்குகள் கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்டபோது மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

குற்றவியல் புலனாய்வு திணைக்களம கடந்த 15ம் திகதி சந்தேகிக்கப்பட்ட வங்கி மேலாளரையும் மற்ற நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். கணக்காய்வாளர்கள் கணக்கில் உள்ள சீரற்ற தன்மையைக் கவனித்தனர், ஆனால் ஆரம்பத்தில் பிரச்சினை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை

வங்கியின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு வங்கி ஒரு வாடிக்கையாளர் மீது ஒரு மோசடியை செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த மோசடியை பிரதான ஊடகங்கள் மறைத்துள்ளன.அதற்கு சம்பத் வங்கி வழங்கும் விளம்பர வருமானமே காரணமெனப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணைகளில்; வெளிப்படையாக ரூ 125 மில்லியன் வரை மோசடி நடந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், மேலாளர் மற்றொரு கிளைக்கு மாற்றப்பட்டபோது, மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் பெறாத அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வங்கியிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்கள் வங்கிக்கு புகார் அளித்தபோது, வங்கி அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உண்மையில், வங்கியில் உள்ள ஒரு மூத்த அதிகாரி அவர்களது கட்டுப்பாட்டின்கீழ் சட்டவிரோதமான எதுவும் நடக்கவில்லை என்று விளக்கமளித்துமுள்ளார்

No comments