சுமந்திர பரமார்த்த குருவும் அவர் தம் சீடர்களும்?

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தின் மையக்கருத்தியலை உடைத்து தமிழக பாணியிலான சுயநல அரசியல் போக்கொன்றை உருவாக்கும் தனது பாதையை விரைந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மும்முரமாகியுள்ளார்.

வழமை போலவே ஏன் எதற்கென சிந்திக்கும் வலு அற்ற மந்தை கூட்டமொன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதில் சயந்தன், சுகிர்தன், ஆனோல்ட் என பெரும் கும்பலொன்றை உருவாக்கிய பெருமை சுமந்திரனிற்குண்டு.


பொய்யொன்றை திரும்ப திரும்பக்கூறுவதன் மூலம் அதனை மெய்யென மக்களை நம்ப வைக்கும் கோயபல்ஸ் உத்தியுடன் சுமந்திரன் களமிறங்கியுள்ளார்.

எக்க ராஜ்ஜிய என்றும் ஒருமித்த நாடு என்றும் சமஸ்டிக்கு கிட்டவுள்ளதாகவும் சொல்லிக்கொள்ளும் சுமந்திரன் அதில் ஒன்றுமேயில்லையென்பதை புரிந்தேயுள்ளார்.

ஆனாலும் தனது அடுத்த அரசியலிற்காக பொய்களுடன் வாழும் அவர் அண்மைக்காலமாக தமிழீழத்தை பற்றியே இனி பேசக்கூடாதெனவும் சொல்லத்தொடங்கியுள்ளார்.

ஒருபுறம் அந்த தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த மாவீரர்கள். மக்களிற்கு விளக்கேற்றி அஞ்சலிக்க சுமந்திரனை மேடையேற்றும் இதே அல்லக்கைகள் மறுபுறம் தமது அடுத்த தவணை பதவிக்காக காத்திருக்கின்றன.

தற்போது தமது பொய்களை மேடை போட்டு நியாயப்படுத்த இக்கும்பல் பிரதேசம் தோறும் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது.

அடுத்து தென்மராட்சியின் களமிறங்க அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது.

No comments