கேப்பாபுலவில் இணைந்த முன்னணி!


முட்டுக்கட்டைகள் மத்தியில் கேப்பாபிலவு மக்களது போராட்டம் இன்றும் முல்லைதீவில்; தொடர்கின்றது.இந்நிலையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அப்போராட்டத்தில் இணைந்துள்ளது. 

இதனிடையே கேப்பாபிலவு  புதுக்குடியிருப்பு வீதியில் மறியல் செய்யவோ, வீதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாதென போராடும் மக்களிற்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. அத்துடன் கேப்பாபிலவு பாதுகாப்புப் படை இராணுவ முகாமின் தலைமையகத்தின் முதன்மை நுழைவாசலுக்கு முன்னால் எந்தவித ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது என்றும், அந்தப் முதன்மை நுழைவாசல் இரண்டுக்கும் அப்பால் 75 மீற்றர் வற்றாப்பளைப் பக்கமாக, இராணுவத்தை ஆத்திரமூட்டும் விதத்தில் நடத்தாது ஜனநாயக ரீதியில் அமைதியாக நடத்துமாறும் நீதிமன்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கட்டளையை மீறிச் செயற்படுபவர்கள் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் உள்ளி;ட்ட முக்கியஸ்தர்கள் இணைந்துள்ளனர்.

No comments