வடக்கில் திட்டமிட்டு கைது!


விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியென அடையாளப்படுத்தி மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை கைது செய்யும் நடவடிக்கையொன்றை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.அவ்வகையில் விடுதலைப்புலிகளது கரும்புலி படையணியின் கருமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர்.

குற்றச்சாட்டின் கீழ் 21 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போதும், 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் விடுதலைப்புலிகள் போராளிகளிற்கு சிகிச்சையளித்ததாக கூறி பெண்ணொருவர் கைதாகியுள்ளனர்.

முன்னதாக பளை பகுதியிலும் முன்னாள் போராளியொருவர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments