தையல் மெசினால் தமிழ் விதவைகள் மகிழ்ச்சியில்!


வடக்கில் வாழ்கின்ற விதவைகளை பிரச்சனைகளை தீர்க்க தையல் மெசின் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் மகள்.

தற்போது இலங்கை பிரதமரது அலுவலகத்தில் பணியாற்றிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் மகள் சி;ங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய ஆலோசனையினையே அவர் தனது சக தமிழ் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் பகிர்ந்துள்ளார்.

குறித்த சிங்கள ஊடகவியலாளர் அண்மையில் வடக்கிற்கு வந்து திரும்பியிருந்த நிலையில் யுத்த அவலங்கள் மத்தியில் பரிதாபகரமான வாழ்வை வாழ்ந்துவரும் தமிழ் விதவைகள் பற்றி சிங்கள நாளிதழ் ஒன்றில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

குறித்த கட்டுரை வெளியானதையடுத்து அவருக்கு கொழும்பிலுள்ள பிரதமர் ரணில் அலுவலகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்றிருந்த குறித்த சிங்கள ஊடகவியலாளருக்கு தமிழ் பெண் பணியாளப் ஒருவர் கீதோபசாரம் செய்துள்ளார்.

நீங்கள பொய்யான செய்திகளை பிரசுரித்துள்ளீர்கள்.அவ்வாறு வறுமையிலோ துன்பத்திலோ தமிழ் விதவைகள் இல்லை.

ரணில் அங்கிளும் எனது அப்பாவும் (சரவணபவன்) அனைத்து விதவை தமிழ் பெண்களிற்கு அவர்கள் தொழில் செய்ய தையல் மெசின் கொடுத்துள்ளனர்.அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்க அதிர்ந்து போய் வீடு திரும்பியுள்ளார் குறித்த சிங்கள ஊடகவியலாளர்.

சுமார் 18ஆயிரம் பெறுமதியான தையல் இயந்திரத்தை கொண்டு விதவைகளை வாழ்க்கையோட்ட சொல்லும் சரவணபவனின் மகளது மாதாந்த சம்பளம் ரணில் அவலகத்தில் இரண்டு இலட்சமென்கிறார் அந்த சிங்கள ஊடகவியலாளர்.   

வடக்கு கிழக்கில் 87ஆயிரம் போர் விதவைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments