பிடிக்கப்படும் குடுகாரர்களை விடுவிப்பதா வேலை?


வடக்கில் பெருமெடுப்பில் நடைபெறும் போதைப்பொருள் வியாபாரத்தை இலங்கை காவல்துறை கண்டுகொள்வதில்லை.நூறு போதைப்பொருள் கடத்தல் நடந்தால் இலங்கை காவல்துறை கைப்பற்றுவது ஒன்றிரண்டு மட்டுமே.அதனையும் அரசியல்வாதிகள்; அநாவசியமாக தலையீடு கஞ்சா வியாபாரிகளை விடுவிப்பது அநியாயமானதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் வடக்கில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த  இலங்கை காவல்துறை அக்கறை காட்டுவதில்லை.அவ்வாறு அவர்கள் தலையிட்டு கைதான ஒரு சிலரை கூட அரசியல்வாதிகள் தலையிட்டு விடுவிப்பது பற்றி அவர்களிற்கு வாக்களித்த மக்களே சிந்திக்கவேண்டுமென தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தை சேர்ந்த கந்தசாமி கோகுலதீபன்; என்பவர் கேரளா கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவராவார். இவர் உள்ளிட்ட ஐவர் கேரளக் கஞ்சாவினை பொதி செய்துகொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி காவல்துறையினர்; கடந்த ஜனவரி 3ஆம் திகதி அன்று இவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் பொல்லுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

அவர்களை விசாரணை செய்து அவர்களுக்குரிய குற்றப்பத்திர அறிக்கைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவென உச்ச நீதிமன்றில் வாதாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  உயரதிகாரியை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக கோகுலதீபன்; என்ற அந்நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் விடுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏனைய நால்வரும் கோகுலதீபனை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் தங்களை விடுதலை செய்ய முடியாது? என நியாயம் கேட்டதன் அடிப்படையில் பொலிசாரால் மறுநாள் அவர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிய வருகின்றது.

No comments