இராகவனை பதவியில் நியமித்தவரே முக்கியமானவர்?


வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் இராகவன் பற்றி பேசுவதை விட அவரை அப்பதவிக்கு நியமித்தவர் பற்றியே ஆராயவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் கிழக்கிற்கு ஆளுநரை நியமித்தவரே வடக்கிற்கான ஆளுநரையும் நியமித்துள்ளார்.

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா பற்றி சொல்லி தெரியவேண்டியதொன்றில்லை.கிழக்கில் தமிழர்களிற்கு எதிராக அவர் எவ்வாறெல்லாம் செயற்பட்டாரென்பது தெரிந்ததொன்றே.

முன்னைய இராணுவ அதிகாரிகளாக இருந்த ஆளுநர்களை எதற்கு நியமித்தனரோ அவரே தற்போதும் ஆளுநர் நியமனங்களை செய்துள்ளார்.குறித்த இராணுவ அதிகாரிகள் தமிழ் அடையாளத்தை அழிப்பதில் மும்முரமாக ஈடுபட்டதாக தெரிந்ததே.

எது எப்படியிருப்பினும் தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதன் இறைமையினை பேணுவதாக இராகவன் செயற்படுவாரானால் தமிழ் மக்களால் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார்.ஆனால் அவர் அவ்வாறு செயற்பட அவரை நியமித்தவர் விடுவாராவென்பது பெரியதொரு கேள்வி எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments