போர்க்குற்ற விசாரணை உள்நாட்டில்தான் - அடித்துக் கூறுகிறது அரசு

“இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுமாக இருந்தால் அவை உள்நாட்டிலேயே இடம்பெறும்.”

– இவ்வாறு நாடாளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் அஜித் பி. பெரேரா.

“இராணுவத்தினரைச் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்போவதாக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் பரப்புரைகளில் எந்தவித உண்மையும் இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் நேற்றுப் பிரதிச் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் வரும் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராஜதந்திரப் பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் எங்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது. இதனால் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

அதனால் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட, அரச சேவையில் அனுபவம் வாய்ந்த தகுதியானவர்களை எதிர்காலத்தில் இராஜதந்திரத் தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்” – என்றார்.

No comments