மைத்திரிக்கு இடமில்லை - தாமரை மொட்டு தீர்மானம்

"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும்.”

–இவ்வாறு வலியுறுத்தி நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒன்றியம்.


அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஹிந்த அணியிலுள்ள மாகாணசபை உறுப்பினர்களின் மேற்படி தீர்மானமானது, மைத்திரி தரப்புக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த அணியுடன் கூட்டணி அமைத்து, சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இந்நகர்வானது பின்னடையாக பார்க்கப்படுகின்றது.

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2 ஆவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில் அதற்கும் தடை போடுகின்றது மேற்படி தீர்மானம்.

No comments