கிணற்றுள் குண்டுகள்?


இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து  ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(19) மாலை கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் போது, வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, உரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிணற்றிலிருந்து மூன்று மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.   

No comments