அரசாங்கத்துக்கு பாரிய பாதிப்பாம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எச்சரிக்கை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு பாரிய பாதிப்பாகவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கத்துக்கு எம்மைப் புறக்கணித்துவிட்டு எந்தவொரு  நடவடிக்கையையும்  முன்னெடுக்க முடியாதுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்து வருவது அரசாங்கத்துக்கான அச்சுறுத்தல் ஆகும்.
தேர்தல் ஒன்று நெருங்கும் போது அவசர அவசரமாக அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர முயற்சிப்பதில் சந்தேகமொன்று எழுகின்றது.
இந்த நாட்டுக்கு அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதாயின், மகாசங்கத்தினர், அரசியல் கட்சிகள், ஏனைய மதத் தலைவர்கள் ஆகியோரின் அங்கீகாரத்துடனேயே கொண்டுவரப்படல் வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் புதிய அரசியலமைப்பு யோசனை கொண்டுவரப்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்திலும் புதிய அரசியலமைப்பு யோசனை கொண்டுவரப்பட்டது. அதனை ஐக்கிய தேசியக் கட்சி தீயிட்டுக் கொழுத்தினார்கள். தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments