மைத்திரி சிங்கப்பூர் பயணம்

இரண்டு நாள்கள் பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் சிங்கப்பூர் பயணித்துள்ளார்.

 எதிர்வரும் திகதி சிங்கப்பூர் மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அவர் பங்கேற்பார். 40 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வர்.

ஐ.நா. ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பிரதான உரை நிகழ்த்துவார். சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments