தமிழரசுக்கட்சி கணக்குவழக்கு சுத்த தங்கம்?


தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்குகள் ஒழுங்காக இருப்பதாக  அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் மத்திய செயற்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் அது சமர்ப்பிக்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் தவறாமல் தேர்தல் ஆணையகத்துக்கும் வழங்கப்படுகின்றது. தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக வேண்டுமாயின் தேர்தல் ஆணையகத்திடம் விண்ணப்பித்து பெற்று பார்வையிட்டுக்கொள்ளலாமெனவும் தெரிவித்துள்ளார்.

தமிழரசு;ககட்சியின் கணக்குவழக்கு ஓட்டுமாட்டு உலகறிந்த செய்தியொன்று.கட்சியில் இருக்கின்ற ஒரு சிலர் மட்டும் அறிந்த இரகசியம்.அதுவும் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற நிதி மற்றும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளிக்க ரணில் வழங்கிய நிதியென பெருமளவு நிதி கணக்கு வழக்கின்றி மாவை,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வசம் சென்றிருந்தது.
இந்நிலையில் கனடாவில் கட்சிக்கு நிதி சேகரிக்க முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் உதவி கேட்க அவர் தமிழரசுக்கட்சி கணக்கு கேட்க அவருக்கெதிராக கட்சி பொங்கியெழுந்திருந்தது.

இந்நிலையிலேயே தமிழரசுக் கட்சி தனது மத்திய செயற்கூட்டத்தில் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிப்பதில்லையே? இதுதொடர்பில் தங்கள் பதில் என்ன?” என எழுப்பப்பட்ட கேள்விக்கே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது கட்சியின் கணக்கு வழக்குகள் கட்சியின் ஒவ்வொரு செயற்குழுக் கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதைவிட, ஒவ்வொரு வருடமும் சகல கணக்கு வழக்குகளும் தேர்தல் திணைக்களத்துக்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன. வேண்டுமானால் நீங்கள் தகவசல் அறியும் சட்டமூலத்தின் ஊடாகக் கோரி விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுப் பார்வையிடலாமென தெரிவித்திருந்தார்.

தேர்தல் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கவென கட்சிகள் வழமையான போலிக்கணக்கறிக்கைகள் தயாரிப்பது தெரிந்ததொன்றே.

No comments