நேற்றிரவு மட்டும் 20 இந்திய மீனவர்கள் கைது?


வடகடலினுள் பிரவேசித்ததாக இந்திய மீனவர்கள் 20 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் 9 இந்திய மீனவர்களும், கிளிநொச்சி கிராஞ்சி கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்களுமாக 20 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

இதனிடையே இராமேஸ்வர மீனவர்களது படகு இலங்கை கடற்;படையினரின் படகு மோதி படகு சேதமடைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.அப்படகிலிருந்த மீனவர்கள் ஆபத்தான நிலையில் தமிழக கரையை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கிளிநொச்சி கிராஞ்சி கடற்பரப்பில் கரை ஓதுங்கிய மீனவர்கள் படகு பழுதடைந்தமையாலேயே கரை சேர்ந்ததாக தெரியவருகின்றது.

No comments