காபன் பரிசோதனைக்கு செல்கின்றது மாதிரி?


மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுவதை தடுக்க தென்னிலங்கை தரப்புக்கள் சில மும்முரமாக செயற்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

ஆயினும் எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 நாட்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 122 ஆவது நாளாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது. தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றது.

இந்நிலையில் அரச ஆதரவு பெற்ற சில தரப்புக்களே மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுவதை தடுக்க மும்முரமாக செயற்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

No comments