மீண்டும் குழு மோதல்?
யாழ்ப்பாணம் பெரியவிளான் இளவாளைப் பகுதியில் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 10 பேர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புது வருடதினத்தமாகிய நேற்றுமுன்தினம் (01) மாலை மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கை கலப்பாகமாறி பின்னர் பெரும் மோதலாக மாறியுள்ளது.
இவ்வாறு மோதலாக மாறிய நிலையில் இரு குழுக்களாக மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக நேற்றுமுன்தினம் (01) இரவு இப் பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டதுடன், பரபரப்பும் பதற்றமும் காணப்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 10 பேர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்குள்ளும் மோதல் குழுவினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.
Post a Comment