வடக்கு ஆளுநராக மார்ஷல் பெரேரா?பிந்திய செய்தி:
கிழக்கு மாகாண ஆளுனராக அசாத் சாலி இன்று பிற்பகல் 2 மணிக்கு நியமிக்கப்படவுள்ளார்.இதனை அசாத் சாலியே கொழும்பு ஊடகங்களிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

மைத்திரியின் அறிவுறுத்தலுக்கமைய வடகிழக்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய ஆளுநர்கள் தொடர்பில் ஊகங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

அவ்வகையில் வட மாகாண ஆளுனராக மார்ஷல் பெரேராவும் கிழக்கு மாகாண ஆளுனராக ஆசாத்சாலியும் நியமிக்கப்படலாம் என தென்னிலங்கை ஊடகமொன்று ஜனாதிபதி அலுவலக தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு புறம் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயினை மீள வடக்கு ஆளுநராக கொண்டுவர அவரது  ஆதரவாளர்கள் ஆலாக பறக்கின்ற நிலையில்  வட மாகாண ஆளுனராக மார்ஷல் பெரேரா பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது.

No comments