யானைக்கு தாவுபவர்களின் பதவிகளைப் பறிக்க அழுத்தம்


ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் எம்.பி.பதவியை ஜனாதிபதி பறிக்கவேண்டும் என்று மஹிந்த அணி வலியுறுத்தியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ஆதரவு அணி எம்.பியான கனக ஹேரத் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

” மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. அமைச்சு பதவிகளுக்கு அடிப்பிடிப்படுவதே அரசாங்கத்தின் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் குறுகிய கால அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் போராடிய இந்த அணியினர் தற்போது தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள போராடி வருகின்றனர். ஊடக அடக்குமுறை தலைதூக்கியுள்ளது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ( சு.க.) போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் சிலர் வழங்க எதிர்பார்த்துள்ளனர்.

அவர்களின் எம்.பி.பதவியை ஜனாதிபதி பறிக்கவேண்டும்.” என்றும் கனக ஹேரத் குறிப்பிட்டார்.

No comments