பேரம் படிந்தது: விட்டுக்கொடுக்கின்றது கூட்டமைப்பு?


ரணிலிற்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுத்த அதேவேளை பேரமொன்றின்  அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தமிழரசு முன்வந்துள்ளது.இதற்காக நினைத்துப்பார்க்க முடியாத பெரும் சலுகைகள் இரா.சம் பந்தனுக்கு கிட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக எதிர்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மாத்திரமே தாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக எதிர்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் ரணிலுடன் முரண்பட்ட போதும் சுமந்திரனின் தலைமையில் நடத்தப்பட்ட பேரம் பேசலில் வழங்கப்பட்ட நினைத்துப்பார்க்க முடியாத சலுகை அடிப்படையில் கதிரை சண்டையினை சத்தமின்றி கைவிட கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

No comments