பளையில் முன்னாள் போராளி கைது?


கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் முன்னாள் போராளியொருவர் கைதாகியுள்ளார்.வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியைச்சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த சுதன் (வயது – 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி போரில் ஒரு காலையும் இழந்துள்ளார். 

பளையில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை அந்த வீட்டினை சோதனையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு இரண்டு கைத்துப்பாக்கி , மற்றும் உள்ளுர் கட்டுத்துவக்கு மற்றும் 150 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டில் பளையில் மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவர் சுடப்பட்டு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments