அரசுக்கு நோகாமல் நொங்கெடுக்கும் போராட்டகாரர்கள்!


யாழ்ப்பாணத்தில் திடீரென களமிறங்கிய 20 பேர் கொண்ட மனித உரிமையை பாதுகாக்க நிதி வாங்கி பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் கண்டன போராட்டமொன்றை நடத்தியுள்ளன.

கொழும்பில் ஒருபுறம் அரசுடன் கூடிக்கொண்டு மறுபுறம் இவ்வாறு புகைப்பட கண்காட்சிக்கென கவனயீர்ப்புக்களை நடத்துவது இத்தகைய தரப்புக்களது வழமையான நடவடிக்கையாகும்.

அந்த வகையில் அரசிற்கு தலையிடி தராத நோகாத போராட்டங்களை நடத்தவும் அவை தவறுவதில்லை.

அவ்வாறான மனித உரிமை பற்றி பேசிக்கொள்ளும் தரப்புக்கள் போராட்ட புகைப்படங்களை காண்பித்து தூதுவராலயங்களிடம் அடுத்த கட்ட நிதிக்கு சென்றுவிடுவதும் வழமையாகும்.

அவ்வாறான தரப்புக்கள் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளாத போதும் ஊடகங்களில் செய்தி வருவதை மட்டும் அவை கவனமாக பார்த்துக்கொள்ள தவறுவதில்லை.

மற்றைய நாட்களில் உறை நிலைக்கு சென்றுவிடும் அத்தகைய கும்பல் இன்று திடீரென நாடகமொன்றினை நடத்தி கலைந்துள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டம்,புதிதாக வரவுள்ள சட்டமூலம்,அரசியல் கைதிகளென அவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை 20 பேர் வரையில் திரண்டு நடத்தியுள்ளனர்.

அத்தகைய அலுவலகங்களது பணியாளர்கள் பங்கெடுத்த நிகழ்வாக அது அமைந்திருந்தது. 


No comments