காந்தி ஜெயந்தியில் காட்டிய அக்கறையை கல்வியில் காட்டவில்லை



வடக்கு மாகாண கல்வி அமைச்சின் திறனற்ற தன்மையினாலேயே வடக்கு மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்ப்பாக கடந்த வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களாக இருந்த குருகுலராஜா மற்றும் பின்னர் கல்விய அமைச்சராகப் பதவியேற்றிருந்த சர்வேஸ்வரன் ஆகியோர் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டதோடு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா முறையற்ற இடமாற்றங்கள் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் அதற்குப் பின்னர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற கந்தையா சர்வேஸ்வரன் குருகுல ராஜாவின் தொடர்ச்சிபோலவே நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்திய அரசின் எடுபிடியாக செயற்பட்ட அவர் பாடசாலைகளில் காந்திவிழா நடாத்துதல் உள்ளிட்ட இந்தியாவைத் திருப்திப்படுத்தும் விழாக்கள் உள்ளிட்டவற்றில் காட்டிய அக்கறையை மாணவர்களின் கல்வியில் காட்டவில்லை என்று விமர்சிக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் வெளியாகிய கல்விப் பொதுதாரதர உயர்தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்த மாணவர்களும் தேசிய ரீதியில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றிருக்கவில்லை என விமர்சிக்கப்படுகின்றது.

No comments