ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது?


வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தனது யாழ்ப்பாண,கிளிநொச்சிய பிராந்திய மாநாட்டை எதிர்வரும் மாசி 3ம் திகதி கூட்டுகின்றது.

விசேட விருந்தினராக கட்சியின் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமாக சி.வி.விக்கினேஸ்வரன் அழைக்கப்பட்டுள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கின்ற பிராந்திய மாநாடு யாழ்.நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்சியிலிலுந்து வெளியேறி தமிழரசு பக்கம் பாயலாமென சொல்லப்பட்டுவரும் கிழக்கு மாகாண பிரமுகர் இரா.துரைரட்ணமும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.No comments