ரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்?


குண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட செயலாளராக தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியினர் தம்மை அகிம்சாவாதியாக காண்பித்துக்கொண்டாலும் அவர்கள் மறுபுறம் ஆயுதங்களுடன் நடமாடுவது வழமையானதே.குறிப்பாக தனது வெற்றிலைப்பெட்டியினுள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா 9மி.மி.கைத்துப்பாக்கியுடன் 2000ம் ஆண்டுகளில் நடமாடியதை மூத்த ஊடகவியலாளர் ஒருவர் நினைவூட்டினார். 

தற்போது பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் மக்கள் சந்திப்புக்களுக்கு வரும்போது ”புளொட் புறூவ்” எனப்படும் பாதுகாப்பு அங்கியை உள்ளாடையாக அணிந்தே வலம்வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் வித்தியாதரன்.

அண்மையில் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூட ”புல்லட் புறூவ்” ஜக்கெட் உள்ளாடையாக அணிந்தே சுமந்திரன் அணிந்தே வந்திருந்ததை அவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். வெளிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கி சூடுகளில் இருந்து தப்பிக்க அது உதவுகின்ற போதும் கிளைமோர் போன்ற குண்டுவெடிப்புக்களின் போது அது உயிர்பாதுகாப்பிற்கு உதவாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments