முன்னாள் முதலமைச்சரின் கூட்டணி கூடியது?


வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று ஞாயிற்றுக்கிமை காலை முதல் நடைபெற்றுவருகின்றது.

இதன் பின்னராக முன்னாள் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள்,கட்சியிலுள்ளோரது பதவி நிலை உள்ளிட்ட பல விபரங்கள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதியிலுள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளதாகவும் இதன் போது கட்சியின் கொள்கை மற்றும் யாப்பு என்பனவும் வெளிப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கினை தாண்டி கிழக்கு வரை கால் பதித்துள்ளதுடன் கிழக்கிலிருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments