ஜதேக -கூட்டமைப்பு ஒப்பந்தம் பொய்யாம்?


ரணிலுடன் தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லையென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கைவிரித்துள்ளார்.

ஆனாலும் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.எனினும் கிழக்கு பிரச்சினைகள் பற்றி அவர் ஏதும் தெரிவித்திருக்கவில்லை.

இதனிடையே கூட்டமைப்பிற்கும் ஜக்கிய தேசியக்கட்சிக்குமிடையே செய்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உலாவரும் ஒப்பந்தம் போலியானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

அரசாங்கத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டிருக்கலாம் என்றும் பிரதான கட்சிகள் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இக்குறைப்பாடுகள் தோற்றம் பெற்றதுடன், அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன்போது ரணில் கூறினார்.

எனினும் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற சமூக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக தொகையை செலவிட்ட அரசாங்கம் என்ற வகையில் பெருமை அடைவதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க முடியும் என்றும் படிப்படியாக நிவாரணம் வழங்கி பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு தமிழ் மக்களின் அவலங்களுக்கு அபிவிருத்தி செயற்பாட்டின் மூலம் சட்ட ரீதியாக தீர்வு வழங்கப் போவதாகவும் சிங்களவர், தமிழர் என்ற ரீதியில் அல்லாது இலங்கையர் என்ற வகையில் ஜனநாயக உரிமையை வென்றெடுத்து நாட்டின் இறைமையை பாதுகாக்க கடமையாற்ற உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments