ரணிலா?முடியவே முடியாது-விக்கரமாதித்தனாக மைத்திரி!


உயர் நீதிமன்றம் வழங்கிய பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான தீர்ப்பையடுத்து இன்று இரவு விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு திங்கள் அமைச்சரவை பதவி ஏற்குமென ஜனாதிபதி இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் எடுத்த தீர்மானம் வெளியாகியதன் பின்னர் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக கூறியுள்ளதாக லக்ஷ்மன் யாபா எம்.பி. கூறியுள்ளார்.
ஐ.தே.முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பிடிவாதத்துக்கு தீர்வு பெறப்படும் என அக்கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments