போர்க்குற்றத்தை கைவிடவில்லை:சுமந்திரன்!


தமிழரசுக் கட்சி எப்போதும் ஐ.தே.கவின் கூட்டாளியேயென முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் கூட்டமைப்புடன் கூட்டு செர துடித்த வரதராஜப்பெருமாள் தற்போது அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனிடையே போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கையினை கூட்டமைப்பு கைவிட்டதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்களிடையே கருத்து தெரிவித்துள்ள அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமைக்கு தீர்வு எட்டமுயற்சிக்கும் நிலையில் திடமான அரசு அமைய எமது ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படும் நிலமையில் அது தொடர்பில் பல பேச்சுக்கள் இடம்பெற்றன.

கூட்டமைப்பின் சார்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தோம். இதில் பேசிய பல விடயங்கள் கூறப்படவில்லை என்ற விடயம் உண்மையானது. ஆனால் வெளியில் கூறப்படாத விடயம் அனைத்தும் பேசப்படவில்லை அல்லது அதற்கு வழிவகை தேடப்படவில்லை என்பது அபத்தமானது. அதிலும் குறிப்பாக போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மட்டும் 30நிமிடம் தர்க்கித்தோம். இதன்போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர். உண்மை இவ்வாறு இருக்க ஒருவர் அக் கூட்டத்தில் பங்குகொள்ளாத நிலையில் அவரின் கருத்தை வைத்து தவறாக திசை திருப்ப முற்படுவது வேடிக்கையானது என தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகை போர்க்குற்றவிசாரணையினை கூட்டமைப்பு கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளதனையடுத்து உள்ளக குழப்பங்கள் தோன்றியுள்ள நிலையில் சுமந்திரன் தனது ஆதரவாளர்களிடையே கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments