மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு தடை!

மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அமைச்சரவைக்கும் பிரதமர் பதவியை அவர் வகிப்பதற்கும், சட்ட ரீதியில் அதிகாரம் இல்லையெனத் தீர்ப்பளிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கைச்சாத்திட்டு தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராணை மனுவின் அடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அமைச்சரவை இயங்க இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று வழங்கியிருக்கிறது.


அத்துடன் பிரதமர் பதவியை வகித்தவர் உட்பட அமைச்சரவையின் 49 உறுப்பினர்களையும் வரும் 12ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது.

முன்னைய செய்தி...
பிரதமர் மஹிந்தவிற்கும்; அவரது அரசாங்கத்துக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடைவிதித்துள்ளது.

குறித்த இடைக்கால தடையினால் அடுத்த கட்ட அரசியல் நகர்வு முற்றாக ஸ்தம்பித நிலையினை அடைந்துள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் சட்டத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனுவின் சமர்பணங்கள் நிறைவுபெற்று மனுவை முற்கொண்டு செல்வதற்கான தீர்மானம் பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே பிரதமர் மஹிந்தவிற்கும்; அவரது அரசாங்கத்துக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடைவிதித்துள்ளது.

No comments