முதல்பிள்ளை தானே: விடாப்பிடியாக சிறீதரன்!கிளிநொச்சிக்குள் மரணவீடோ அல்லது திருமணவீடோ எந்த கருமாந்திரமென்றாலும் தலைப்பிள்ளை தன்னையே முன்னுக்கு அழைக்கவேண்டுமென்பது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கட்டளையாகும்.அதனை தாண்டி யாரேனும் விருந்தாளிகளென அழைத்துவிட்டால் அவர்கள் பாடு மிகப்பரிதாபகரமாகிவிடும்.

அண்மையில் பளை அரசினர் வைத்தியசாலையில் ஊர்மக்களால் கட்டி வழங்கப்பட்ட கட்டடங்களது அங்குரார்ப்பண நிகழ்வுக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.கூடவே அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அரியரத்தினமும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவருமே தற்போது சிறீதரனிற்கு எட்டாப்பொருத்ததிலுள்ள பிரமுகர்களாக இருக்கின்றனர்.இந்நிலையில் அதுவும் தனது ஜமீனிற்குட்பட்ட பளைக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமை அவரை சீற்றத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.

இதனையடுத்து பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை தொலைபேசியில் அழைத்த சி.சிறீதரன் ஒரு படி முழங்கித்தள்ளியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முதலமைச்சரது புகைப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டு வாக்கு கோரிய சி.சிறீதரன் தற்போது சி.வி.விக்கினேஸ்வரனின் தனிக்கட்சி அறிவிப்பின் பின்னர் திட்டித்தீர்த்துவருவது தெரிந்ததே.  

No comments