தீர்ப்பு எந்நேரமும் வெளியாகலாம்:ஜதேக அவசர கூட்டம்!


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் தீர்ப்பு எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது இன்று கூட வழங்கப்படலாமென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மறபுறம் நாடாளுமன்ற தடையையும் மீறி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களை நாடாளுமன்றிக்கு அழைத்து விசாரணை செய்யும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இன்னொரு புறம் கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கவிருக்கின்றனர். 

மறுபுறம் அரசியல் யாப்பு தொடர்பில் உயர் நீதிமன்றிடம் ஜனாதிபதி விளக்கம் கேட்க தீர்மானித்துள்ளார்.

No comments