ஞானசாரரிற்கு நத்தார் விடுமுறை?


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மஹா நிக்காயவின் கோட்டே தரப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மஹா நிக்காயாவின் கோட்டே மகாநாயக்க தேரர் இத்தேபன்ன தம்மாலங்காரவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தான் செய்த தவறை ஞானசாரர்  உணர்ந்துக்கொண்டுள்ளதால், எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகளுடன் ஞானசார தேரரையும் விடுதலை செய்யுமாறு குறித்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments