கஞ்சாவிற்காக ஆள் கடத்தலா?


யாழ்.குடாhநாட்டில் போதைப்பொருள் கடத்தலில் இலங்கை படைகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை தொடர்ந்து அம்பலமாகிவருகின்றது.நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேர் கடத்த முற்பட்ட சம்பவம் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதென்பது தெரியவந்துள்ளது.

வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியானை சேர்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவரை கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றிருந்தது.இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் கடத்தல்கார்களை சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் கடத்தி சென்று இயக்கச்சி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, கடத்தப்பட்ட முதியவர் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், அதனாலேயே தாம் கடத்தியதாகவும் கடத்தல்கார்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை கடத்தல்கார்கள் தொடர்பில் விசாரணை நடாத்தியபோது அதில் இருவர் இராணுவ சிப்பாய்கள் என அடையாளம் காணப்பட்டுமிருந்தனர்.
இதனிடையே கடத்தப்பட்ட நபரின் மகனுடன் கஞ்சா வர்த்தகத்தில் குறித்த கும்பல் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
எனினும் கடத்தப்பட்டவரின் மகன் கஞ்சாவிற்கென பணத்தை பெற்றுக்கொண்டு அதனை கொடுக்காது பதுங்கியிருந்ததாக சொல்லப்படுகின்றது.
மகனை வெளியே கொண்டுவரவே அவரது தந்தையினை கடத்தி செல்ல முற்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடல்வழி போதைப்பொருள் கடத்தலின் முன்னணியில் தற்போது இருந்துவருவது தெரிந்ததே.

No comments