காவல்துறை சுட்டுக்கொலை! சந்தேகநபர் கிளிநொச்சியில் சரண்!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், இன்று காலை கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாற்றியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் காவல்துறை விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையிலேயே, அவர் இன்று காலை  கிளிநொச்சிப் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவராவார்.

சந்தேக நபரிடம் வாக்குமூலங்கள்  பெற்றப்பட்டதன்  பின்னர், அவரை  குற்றப் புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments