இரணைமடு குள வான்கதவுகள் மூடப்படுகின்றன!வன்னியில் வெள்ளம் வடியத்தொடங்கியுள்ள நிலையில் இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் இன்று மாலையுடன் முற்றாக மூடப்படலாமென சொல்லப்படுபிக்னிற்து.

இன்று காலைn இரணைமடுக் குளத்தின் 4 வான் கதவுகள் முற்றாக மூடப்பட்டன. 2 வான் கதவுகள் 2 அடியாகவும், 8 வான் கதவுகள் 2 அடி 6 அங்குலமாகவும் திறக்கப்பட்டடுள்ளன.

இவையனைத்தும் நீர்வரத்து குறைந்துள்ளதை கருத்தில்  கொண்டு இன்று மாலையுடன் மூடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே இரணைமடு வெள்ளப்பாதிப்பினால் பன்னங்கண்டியின் பின் பக்க வயல்கள் மற்றும் முரசு மோட்டையின் இடைப்பகுதி வயல்கள், வெலிகண்டல் பாலத்திற்கு முன் இருந்து புளியம்பொக்கனை சந்திக்கு உட்பட்ட வட்டக்கச்சியில் இருந்து கலைவெட்டி திடல் வரையான பெருமளவான வயல்கள் பெரு வெள்ளத்தில் சிதைவடைந்துள்ளது.

No comments