வன்னி வெள்ள அனர்த்தம்! மைத்திரி தாய்லாந்து பயணம்! கூட்டமைப்பு அமைச்சரை அழைக்கிறது!


வன்னி அவலங்களினை தீர்க்க அதிகாரிகளிற்கு உத்தரவிட்டு இலங்கை ஜனாதிபதி குடும்பதுடன் தாய்லாந்து பயணமாக கூட்டமைப்போ ரணிலின் அமைச்சரை வரவேற்க தயாராகின்றது.

அவ்வகையில் கிளிநொச்சி , முல்லைத்தீவு. மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான நிலமைகளைப் பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டாராவை மாவை.சேனாதிராயா மற்றும் சுமந்திரன் , சிறிதரன் போன்றோர் நேரில் அழைத்துவந்து நிலமையை விளக்க ஏற்பாடு செய்துள்ளனராம் .

வடக்கு மாகாணத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு பொழிந்த கன மழையின் காரணமாக 44 ஆயிரம் பேர் பாதிப்படைந்த நிலையில் பல ஆயிரம் பேர் இடைத்தங்கள் முகாம்களிலும் தங்கியுள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட பாதிப்புக்களில் அதிகம் பாதித்த மாவட்டங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கே இன்று பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மாவட்டத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் அவலங்களின் மத்தியில் வாழ்வாதார அழிவுகள் சொத்து அழிவுகளும் ஏற்பட்டுள்ளதனால் வெள்ளம் முழுமையாக வற்றிய பின்பே முழுமையான அறிக்கை வெளியிட முடியும் என மாவட்டச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக ஜனாதிபதி மைத்திரி பெயரில் அவரது ஊடகப்பிரிவு துண்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.பின்னர் மைத்திரி படையினர்,அரச அதிபர்கள் மற்றும் ஆளுநருக்கு உத்தரவென அறிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் ரணிலோ அமைச்சரவை அமைப்பதில் மும்முரமாகியிருப்பதால் வாய் திறந்திருக்கவில்லை.இந்நிலையிலேயே கூட்டமைப்பு அமைச்சருக்கு அழைப்புவிடுத்துள்ளது.

No comments