வாறார் வாறார் கிளிநொச்சி வாறார் மைத்திரி?


நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி  இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை  திறக்கும் பொருட்டு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக  தெரிவிக்கவில்லை.

 ஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி  இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  நேரடியாக  இரணைமடு குளத்திற்கு சென்று  ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இதனிடையே வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் குளமான இரணைமடுவின் நீர்நிலை தற்போது 35 அடியை எட்டியுள்ளது.இந்நிலையில் அது எந்நேரமும் 36 அடி மட்டத்தை எட்டலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களில் பெரிய குளங்கள் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளது. குறித்த 10 குளங்களிலும் தற்போது போதிய நீர் தேக்கப்பட்டுள்ளது. இதில் 34 அடி கொள் அளவாக இருந்த இரணைமடுக் குளத்தில் அணைக்கட்டின் பாதுகாப்புக் கருதி 33 அடி நீரே தேக்கும் நிலமையில் குளப் பனரமைப்பு இடம்பெற்றிருந்தது.

தற்போது பெய்துவரும் மழையினால் 36 அடி நீர் தேக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிரகாரம் தற்போது 35 நீர் உள்ளது. அதாவது புதிதாக புனரமைப்புச் செய்த பகுதியிலும் தண்ணீர் தற்போது தேக்கப்பட்டுள்ளது. 
உலக வங்கியின் நிதி உதவியுடன் குளத்தின் அணைக்கட்டுக்கள் உயர்த்தப்பட்ட பின்னர் தற்போதே நீண்ட இடைவெளியின் பின்னர் 36 அடி உயரத்திற்கு நீர் சேர்;ந்துள்ளது.

No comments