பருத்தித்துறை துறைமுகம்: பெண்கள் களத்தில் - ஆண்களோ பார்ட்டியில்!


பருத்தித்துறை துறைமுக விஸ்தரிப்பரினால் முன்னணி பாடசாலைகளான ஹாட்லிக்கல்லூரி மற்றும் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலைகள் பாதிக்கப்படுமென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பதிவு இணையம் ஏற்கனவே பல தடைவ எச்சரித்திருந்த போதும் பாடசாலை நிர்வாகங்களும் சரி,பழைய மாணவர்கள் சங்கங்களும் சரி தமது கொண்டாட்டங்களிற்கு மட்டும் நேரமொதுக்கியிருந்தன.இதனை பற்றிக்கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் பாடசாலைக்கு முன்பாக துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவதை எதிர்பார்ப்பதாக பாடசாலை பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் தெரிவித்து தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிள்ளைகளின் எதிர்காலத்தினை பாழாக்கும் நோக்கில் இச்செயற்பாடு இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கிழக்கு பக்கமாக துறைமுகம் ஒன்று அமைப்பதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதை தொடர்ந்து எமது பாடசாலைக்கு முன்பாக துறைமுகத்தினை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கல்விச்சமூகத்திற்கு தெரியாமல் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை வை.எம்.சி.எ மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இதில் பாடசாலைக்கு முன்பாக துறைமுகம் அமையுமாயின் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராயப்பட்டது. துறைமுகம் அமையுமானால் 100 வரையான டாங்கி படகுகள் தரித்து நிற்கும். அவை இயங்கத்தொடங்கி ஒரு மணித்தியாலத்திற்கு பின்னரே ஓடக்கூடிய நிலைக்கு வரும். அதன் இரைச்சல் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் கேட்கும். அப்படி இருக்கையில் 50 மீற்றர் தூரத்தில் இருக்கும் பாடசாலையில் எவ்வாறு கல்வி கற்பது? என கேள்வி எழுப்பப்பட்டது.

அழகான அமைதியான கடற்கரை சூழலில் இப்பாடசாலை அமைக்கப்படவேண்டுமென திட்டமிட்டு 200 வருடங்களுக்கு முன்னர் இப்பாடசாலை அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பாடசாலை சூழலின் இயற்கை சமநிலையை குழப்பும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் ஹாட்லிக்கல்லூரி தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்ற நிலையில் அதன் பழைய மாணவர்கள் நாடுகள் தோறும் பார்ட்டிகளில் மும்முரமாகியிருப்பதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனா

No comments